நின்று கொண்டிருந்த விமானம்: கட்டிடத்தை உடைத்து உள்ளே நுழைந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மால்டாவில் நின்று கொண்டிருந்த விமானம் திடீரென்று ஓடுபாதையில் ஓடி அருகிலிருந்து கட்டிடத்தின் மீது மோதியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மால்டாவில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று தொழில் நுட்பம் கோளாறு காரணமாக விமானத்தின் ஓடு பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் கடந்த புதன் கிழமை உள்ளூர் நேரப்படி 10 மணி அளவில் திடீரென்று நகர்ந்து சென்று, அருகிலிருந்த் கட்டிடத்தின் மீது மோதியுள்ளது.

இதனால் விமானத்தின் முக்குப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தை அறிந்த விமானநிலைய அதிகாரிகள் உடனடியாக விரைந்து வேறு ஏதும் சேதம் ஏற்பட்டுள்ளதா, என்பதை அறிவதற்காக அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி விமானம் நகர்ந்து சென்றதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் காற்றின் வேகம் அதிகம் இருந்ததாலேயே நகர்ந்து சென்று கட்டிடத்தின் மீது மோதியுள்ளது என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்