உறைந்த ஆற்றில் சிக்கித் தவித்த 70 வயது மூதாட்டி: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் ஆற்றில் விழுந்து தவித்த 70 வயது மூதாட்டியை இரண்டு இளைஞர்கள் போராடி காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

சீனாவில் தற்போது கடுங் குளிர் நிலவி வருவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதில் ஒரு பகுதியாக ஹூபே மாகாணம் போடிங் நகரின் வழியே பாயும் காவோ ஆறு கடுங்குளிரால் உறைந்துள்ளது.

ஆனால் இதன் மத்திய பகுதியில் நீரோட்டம் உள்ளது. இதை வேடிக்கை பார்ப்பதற்காக 70 வயது மூதாட்டி சென்ற போது, அங்கு எதிர்பாரதவிதமாக ஆற்றில் சிக்கினார்.

உறைந்த பனிப்பரப்பை பிடித்துக் கொண்டாலும், சில்லிடும் குளிரால் அவரால் தாக்குபிடிக்க முடியவில்லை. அப்போது அந்த வழியே சென்ற இரு இளைஞர்கள் மூதாட்டியைக் கண்டு அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பனிப்பரப்பை கைகளாலேயே உடைத்து மூதாட்டியை மீட்ட காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி பரவி வருவதால், இதைக் கண்ட இணையவாசிகள் குறித்த இளைஞர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்