22 ஆண்டுகளாக அடிமை: பெற்ற மகள் மூலமே 8 பிள்ளைகளுக்கு தந்தையான கொடூரனுக்கு சிறை

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

அர்ஜென்டினாவில் 22 ஆண்டுகளாக பெற்ற பிள்ளையே பாலியல் அடிமையாக நடத்தி அதன் மூலம் எட்டு பிள்ளைகளுக்கு தந்தையான நபருக்கு 12 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவை சேர்ந்தவர் Domingo Bulacio(வயது 57), 22 ஆண்டுகளுக்கு முன்பாக மனைவியை அடித்து துரத்தியவர் மகளுடன் வசிக்க தொடங்கினார்.

தொடர்ந்து அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன் எட்டு பிள்ளைகளுக்கும் தந்தையாகியுள்ளார்.

தந்தையின் கொடுமையை தாங்கமுடியாமல், மகள் கடந்தாண்டு அளித்த புகாரின் பொலிசார் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இவருக்கு 12 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை அளித்த நேரத்திலும், எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாமல் குற்றவாளி அமைதியாக இருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், எனது தாய் பிரிந்து சென்ற போது 11 வயது இருக்கும்.

அன்று முதல் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார், அண்டை வீட்டாரிடம் பேசினால் கூட அடிப்பார், பாலியல் ரீதியாக தாக்கினார்.

வெளியில் கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டுவார், என் வாழ்க்கைக்காக பயந்து நான் எதையும் சொல்லாமல் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் வழக்கை திரும்ப பெறக்கோரி தந்தையின் உறவினர்கள் தொடர் அச்சுறுத்தல் விடுத்த நிலையில், நீதி கிடைக்கும் என தான் போராடியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து டிஎன்ஏ பரிசோதனையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து 12 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைகள் தொண்டு நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், தாயுடன் இணைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்