புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக இஸ்ரேலில் உலக சாதனை

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இஸ்ரேல் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்காக, 118 அடி உயர பிளாஸ்டிக் Tower-ஐ டெல் அவிவ் நகர மக்கள் வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளனர்.

டெல் அவிவ் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒமர் சயாக், இவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான், இச்சிறுவனுக்கு லிகோ நிறுவனத்தின் விளையாட்டுப் பொருட்களை மிகவும் பிடிக்கும்.

இதனை அறிந்த அச்சிறுவனின் பள்ளி ஆசிரியர், டெல் அவிவ் நகர மக்களின் உதவியுடன் Tower ஒன்றை எழுப்ப எண்ணினார்.

அதன்படி பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் பலரிடமிருந்து நிதி திரட்டி, பிளாஸ்டிக் துண்டுகளை வாங்கினார்.

அவற்றைக் கொண்டு அந்நகர மக்களுடன் இணைந்து பிளாஸ்டிக்கால் ஆன Tower ஒன்றை கட்டி முடித்தார்.

இது சுமார் 50 ஆயிரம் பிளாஸ்டிக் துண்டுகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு, 118 அடி உயரத்தில் கிரேனின் உதவியுடன் கட்டப்பட்டது.

பலவகை நிறங்களால் ஆன பிளாஸ்டிக் துண்டுகளால் உருவாக்கப்பட்ட இந்த Towerக்கு சிறுவனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த Tower உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்