இங்க வேலைக்கு போகாதீங்க: விடுமுறையை தவிர்க்கும் நாடுகளின் பட்டியல் வெளியானது

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

உலகளவில் விடுமுறையை தவிர்த்து வேலையில் மூழ்கி கிடக்கும் நாடுகளின் பட்டியலில் தென் கொரியா முதலிடத்தை பிடித்துள்ளது.

Expedia எனும் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 30 நாடுகளில் ஓன்லைன் மூலமாக இதற்கான வாக்கெடுப்பை மேற்கொண்டது.

இந்த பட்டியலில் தென் கொரியா முதலிடம் பிடித்துள்ளது, இந்நாட்டில் 82 சதவித மக்கள் வேலைப்பளு காரணமாக, சுற்றுலாவுக்கான விடுப்புகளை எடுக்காமல் பணிபுரிந்து வருகின்றனர்.

தென் கொரியாவைத் தொடர்ந்து பிரான்ஸ் 66 சதவிதமும், மலேசியா 65 சதவிதமும், ஹாங்காங் 64 சதவிதமும், இந்தியா 60 சதவிதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதுகுறித்து Expedia நிறுவனத்தின் தலைவர் கூறுகையில், சரியான நேரத்தில் விடுப்பு எடுத்து, வேலை- வாழ்க்கை என இரண்டுக்கும் சமநிலையை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இருமுறையாவது விடுமுறை எடுத்து நம்மை வேலையில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். அது உடலுக்கான புத்துணர்ச்சி மட்டும் அன்றி, மனதுக்கும் புத்துணர்வை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியலின் மூலமாக தாய்லாந்தைச் சேர்ந்த 75 சதவித மக்களும், ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த 70 சதவித மக்களும், இந்தியாவைச் சேர்ந்த 67 சதவித மக்களும் தங்களது சுற்றுலா விடுமுறையை தள்ளிப் போடுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே நோர்வே, நெதர்லாந்து, அயர்லாந்து, சுவீடன் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் முறையே அதிகளவில் விடுமுறை அளிப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்