10 ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை: சதித்திட்டம் தெரிந்தும் அமைதி காத்த உளவுத்துறை

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

பெனாசிர் பூட்டோ கொல்லப்படுவதற்கு முன்பாகவே தகவல் தெரிந்திருந்தும் பாகிஸ்தான் உளவுத்துறை அமைதி காத்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த பெனாசிர் பூட்டோ, கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27ம் திகதி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ராவல்பெண்டியில் தீவிர பிரச்சாரம் செய்த போது கொல்லப்பட்டார், இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

இதற்கான திட்டம் ஒசாமா பின்லேடன் மூலம் தீட்டப்பட்டதாம், ஆனால் இந்த விஷயம் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கிறது, ஒசாமா பின்லேடன் அனுப்பிய கொரியர் ஒன்றின் மூலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில், ஒசாமா பின்லேடன் பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார், இதற்காக இரண்டு பேரை பயன்படுத்த உள்ளார், டிசம்பர் 22ம் திகதியில் இருந்து இதற்கான பணிகள் நடக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கடிதத்தின் மீது உளவுத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, சரியாக பத்து ஆண்டுகள் கழித்து இக்கடிதம் பற்றி தகவல்கள் வெளிவந்துள்ளதால் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்