இந்த தொழிலில் வெளிநாட்டவர்களுக்கு வேலை இல்லை: சவுதி அரேபியா அதிரடி

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் வெளிநாட்டினருக்கு வேலை கொடுக்க கூடாது என்று அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை தெரிவித்துள்ளன.

சவுதி அரேபியாவில் சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர்கள், அங்கு உள்ள 6 ஆயிரம் தங்கம் மற்றும் வெள்ளி நகை தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், இனி நகைக்கடைகளில் வெளிநாட்டு வேலையாட்களை இந்த பணிகளில் அமர்த்தக் கூடாது என்று, தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

இம்முடிவு உள்ளூர் மயமாக்குதலின் ஒரு பகுதியாகும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து சவுதி அரேபியாவின் அதிகாரத்தின் கீழ் உள்ள குவாசிம், டாபக், நாஜ்ரன், பாகா, அசிர், வடக்கு எல்லை மற்றும் ஜாசான் ஆகிய 7 பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு, உரிய பயிற்சி அளிக்கப்பட்டு நகைக்கடைகளில் பணி அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் காலித் அபா அல்-காய்ல் கூறுகையில், நாட்டில் உள்ள கடைகளில், உள்ளூர் மக்களை அதிக அளவில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் குறித்த ஆய்வாளர்கள், 5,960 கடைகளில் நடத்திய ஆய்வில், 210 கடைகளில் வெளிநாட்டினர் பணிபுரிவது தெரியவந்துள்ளது.

அந்த கடைகள், விரைவில் அரசு நிறுவனங்களின் உதவியுடன் உள்ளூர்மயமாக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்