மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

வங்கதேசத்தில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர், நாட்டின் சில்ஹெட் நகரில் உள்ள காதிம்நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

கமால் அகமது (45) என்ற நபர் தனது 11 வயதான வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 7 மற்றும் 14-ஆம் திகதிகளில் மகளை கமல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து தனது பாட்டியிடம் சிறுமி கூற அவரை அழைத்து கொண்டு உள்ளூர் பஞ்சாயத்து தலைவரிடம் சென்ற பாட்டி அனைத்து விடயங்களையும் கூறியுள்ளார்.

இதையடுத்து சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட கமலை பொலிசார் கைது செய்துள்ளனர், தந்தையால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கமால் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்