ரஷ்யாவில் சூப்பர் மார்க்கெட்டில் வெடித்துச் சிதறிய குண்டு: 10 பேர் காயம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திடீரென்று குண்டு வெடித்தால் 10 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் St Petersburg-ல் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் திடீரென்று குண்டு வெடித்ததால், 10 பேர் காயமடைந்திருப்பதாகவும், இதில் 4 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், 6 பேருக்கு அந்த இடத்திலே முதலுதவி அளித்து வருவதாகவும் முதல் கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கையில், புதன் கிழமை அதாவது இன்று St Petersburg பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சிறிய அளவிலான 200 கிராம் வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளதாகவும், இதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை என்றும் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாமா என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் நடந்த போது சூப்பர் மார்க்கெட்டின் காம்ப்ளக்ஸின் உள்ளே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருந்ததாகவும், ஆனால் யாருக்கும் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்