15 வருடமாக மகளை அடைத்து வைத்த பெற்றோர்: உடல் உறைந்து இறந்து போன பரிதாபம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஜப்பானில் பெற்றோரே தங்கள் மகளை 15 வருடமாக ஒரே அறையில் அடைத்து வைத்திருந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜப்பானின் கன்சாய் மாகாணம், ஒசாகா நகரில் வசிக்கும் தம்பதி யாசுடாகா காகிமோட்டோ (55)-யாகுரி(53). இவர்களுக்கு ஐரி என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் இவர்கள் ஐரியை 16 வயதாக இருக்கும்போது தங்கள் வீட்டு சிறிய அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து 15 வருடமாக அதே அறையில் இருந்த ஐரி தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்தால், அவர்கள் உடனடியாக யாசுடாகா தம்பதியரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது ஐரியை 15-வருடமாக அறையில் அடைத்து வைத்திருந்தது உண்மை தான் என்றும், மனநிலை சரியில்லாமல் அவள் இருந்தால் முரட்டுத்தனமாக நடந்து கொள்வாள்.

இதன் காரணமாகவே அவளை அறையில் அடைத்து வைத்தோம், அதுமட்டுமின்றி ஒரு வேளை மட்டுமே உணவு கொடுத்து வந்தோம் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து அவளின் மரணத்துக்கு குளிரில் உடல் உறைந்து போனதுதான் காரணம் எனவும், மிகவும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையுடன் காணப்பட்ட அவர், இந்த 33 வயதில் கூட வெறும் 16 கிலோ எடை கொண்டவராக இருந்தார் எனவும் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.

இதனால் பெற்றோரை கைது செய்த பொலிசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்