மூன்று சூரியன்கள்: வானில் தோன்றிய அதிசய நிகழ்வு

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

வடகிழக்கு சீனாவில் மூன்று சூரியன்கள் திடீரென தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவின் வடகிழக்கு பகுதியான HEILONGJIANG மாகாணத்தில் நேற்று ஒரே நேரத்தில் வானில் மூன்று சூரியன்கள் தோற்றமளித்தது.

சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த அரிய காட்சியை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.

வளிமண்டலத்தில் காணப்படும் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் மேகக்கூட்டங்களின் காரணமாக சூரியன் இவ்வாறு காட்சியளித்ததாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்