ஸ்மார்ட்போனில் விவாகரத்து கூறிய கணவன்: கதறும் மனைவி

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

ஓமன் நாட்டை சேர்ந்த கணவர் தன்னுடைய மனைவிக்கு போனில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

ஓமனை சேர்ந்த சைத் ஜஹ்ராப் அலி என்பவருக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த கவுசியா பேகம் என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட சைத், ஏழு பெண்களில் இருந்து கவுசியாவை தெரிவு செய்தார்.

திருமணம் முடிந்து சில நாட்கள் அவருடன் தங்கி இருந்தவர் ஓமன் நாட்டுக்கு சென்று விட்டார்.

ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா வரும் சைத், மனைவியுடன் சந்தோஷமாக இருந்துவிட்டு செலவுக்கு பணத்தை கொடுத்துவிட்டு செல்வது வழக்கமாம்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் போன் செய்த ஹைத், மூன்று முறை முத்தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசியா, கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தரக்கோரி வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், எனது உறவினர்கள் மூலம் திருமணம் நடந்தது, ரூ.10 லட்சம் மதிப்பிலான வீட்டை வாங்கித் தருவதாக கூறி திருமணம் செய்து கொண்டார்.

ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வந்து என்னை பார்த்துவிட்டு செல்வார், செலவுக்கும் பணம் தருவார்.

திடீரென ஆகஸ்ட் மாதம் போன்று செய்து முத்தலாக் கூறினார், என் தந்தையும் இறந்துவிட்டார், தாயை பராமரிக்க ஆள் இல்லை.

திருமணம் செய்து வைத்த என் உறவினர்களிடம் கூறினால், வேறொரு ஆளை திருமணம் செய்து கொள் என்கிறார்கள்.

எனது கணவரிடம் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்