கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு இரையாகும் இளைஞர்கள்: புதிய சட்டத்தால் சர்ச்சை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
129Shares

தனது துணையின் ஒப்புதல் இன்றி உறவுக்கு முயன்றால் அது கற்பழிப்பு குற்றத்திற்கு நிகரானது என்ற புதிய சட்டத்தை அடுத்த ஆண்டு முதல் ஸ்வீடன் அரசு அமுலுக்கு கொண்டுவர உள்ளது.

இதுதொடர்பாக பேசிய ஸ்வீடன் பிரதமர் Stefan Lofven, பாலியல் உறவு என்பது வெளிப்படையானதாக இருத்தல் வேண்டும், இருவருக்கும் மனமார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். அப்படி இல்லை என்றால், அதில் வன்முறை நிகழ்ந்தால் அது கண்டிப்பாக சட்டவிரோதம் என்றார்.

மட்டுமின்றி பாலியல் உறவில் உங்களுக்கு உறுதியற்ற நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக விலகிக்கொள்ளலாம். அதில் நிர்பந்திக்க எவருக்கும் உரிமையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய நீதித்துறை அமைச்சர் மார்கன் ஜோன்சன், குறித்த சட்டத்தால் பாலியல் குற்றச்சாட்டு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.

எதிர்வரும் யூலை 2018 முதல் அமுலுக்கு வரும் குறித்த சட்டத்தால் ஸ்வீடன் நாட்டின் ஆண்கள் மற்றும் இளம்வயதினரை குறிவைக்கப்படுவதாக நீதித்துறை பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் அதற்கு ஆண்கள் கண்டிப்பாக மாற வேண்டும் எனவும் அமைச்சர் மார்கன் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை எதிர்கொள்ளும் பொருட்டு பொலிஸ் துறைக்கு 120 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே மாதிரியான சட்டம் ஒன்றை அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள கல்லூரி மற்றும் பாடசாலைகளில் ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளனர்.

ஆனால் ஸ்வீடன் அரசு முதன் முறையாக அதை சட்டமாகவே அமுலுக்கு கொண்டுவர உள்ளது. டென்மார்க்கில் இதே சட்டத்திற்கு அங்குள்ள பொதுமக்கள் எதிர்த்து வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்