பேராபத்தில் வடகொரியா: உயிர் கொல்லும் கடும் குளிரில் போர் ஒத்திகை மேற்கொண்ட அதிரடிப்படையினர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
554Shares

தென் கொரியா மற்றும் அமெரிக்க அதிரடிப்படையினர் ஒன்றிணைந்து -20C குளிரில் போர் ஒத்திகை மேற்கொண்டுள்ளது கொரியா தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தென் கொரியாவில் உள்ள Pyeongchang பகுதியில் பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளை சீர்குலைக்கும் நோக்கில் வடகொரியா தொடர்ந்து மிரட்டல்ன் விடுத்து வருகிறது.

இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகப்படுத்தியுள்ளனர் தென் கொரிய அரசாங்கம்.

இருப்பினும் வடகொரியாவின் போர் தந்திரங்கள் தொடர்பில் தென் கொரியா அறிந்து வைத்துள்ளதால் அதை முறியடுக்கும் வகையில் அதிரடிப்படையினரை களமிறக்கியுள்ளனர்.

தென் கொரிய அதிரடிப்படையினருடன் அமெரிக்க மரைன்ஸ் எனப்படும் அதிரடிப்படையினரும் ஒன்றிணைந்து தற்போது கடுமையான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென் கொரியாவில் தற்போது காலநிலை -20C அளவில் உள்ளது. மட்டுமின்றி கடுமையான பனிப்பொழிவும் உள்ளது.

இந்த கொடூரமான காலநிலையிலும் அமெரிக்க மற்றும் தென் கொரிய அதிரடிப்படையினர் சுமார் 440 பேர் கடினமான ஒத்திகையில் ஈடுபட்டுவரும் காணொளியை வெளியிட்டுள்ளனர்.

டிசம்பர் 4-ஆம் திகதி தொடங்கிய இந்த ஒத்திகையானது தற்போது முடிவுறும் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை ரகசியம் காத்து வந்த இந்த ஒத்திகை தொடர்பில் தற்போது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

தென் கொரியாவில் அமெரிக்க ராணுவத்தினர் சுமார் 28,500 பேர் தங்கி பாதுகாப்பு மற்றும் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்