சவுதி அரேபியாவில் உள்ள அரண்மனை மீது ஏவுகணை தாக்குதல்: சுட்டு வீழ்த்தியதாக தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
812Shares

சவுதி அரேபியாவில் உள்ள அரண்மனை மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக அந்நாட்டு அரசுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசுப் படைகளுடன் இவர்கள் நடத்திவரும் மோதலால் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அரசு படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

அதுமட்டுமின்றி ஹவுத்தி புரட்சிப் படையினரை விமான தாக்குதல் மூலமாக வேட்டையாடும் பணியில் சவுதி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரில் 8,670-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பத்தாயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதற்கு பழி தீர்க்கும் வகையில் சவுதி அரேபியா மீது போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் உள்ள அரண்மனையின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்