கொத்திய நாகப்பாம்பு: வாட்ஸ் அப்பில் பதிவிட்ட 12 மணிநேரத்தில் பலியான சிறுவன்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1045Shares

இந்தோனிசியாவில் செல்லப் பிராணியாக வளர்த்த வந்த நாகப் பாம்பு, வளர்த்தவரையே கடித்ததால், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தோனிசியாவின் West Java மாகாணத்தில் இருக்கும் Bundung பகுதியைச் சேர்ந்தவர் Aril(14), இவர் செல்லப் பிராணியாக பாம்புகள் வளர்த்து வந்துள்ளார்.

அப்படி வளர்த்து வந்த நாகப்பாம்பு ஒன்று தான் அவரை கடித்துள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் தன்னை பாம்பு கடித்துவிட்டது, காப்பாற்ற வாருங்கள் என்று கூறி, அது தொடர்பான புகைப்படத்தை அதில் பதிவேற்றம் செய்து, நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

இதைக் கண்ட நண்பர் ஒருவர் உடனடியாக அவர் இருக்கும் வீட்டிற்கு விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார், ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12-மணி நேரத்திற்குள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் கடந்த 11-ஆம் திகதி நடைபெற்றது எனவும், Aril தனது தாயாரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் அவர் தனது நண்பர்களின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்