எரியும் காருக்குள் சிக்கித் தவித்த தாய்: உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய மகன்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
210Shares

சீனாவில் எரியும் காருக்குள் சிக்கிய தாயை அவரது மகன் காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சீனாவின் Henan மாகாணத்தில் உள்ள Xinxiang பகுதியில் இருக்கும் வீதியில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் சிலிண்டர் வெடித்ததால், காரின் உள்ளே இருந்த தாய் மற்றும் மகன் சிக்கினர்.

அப்போது மகன் காரின் கதவை திறந்து வெளியே வந்த போதும், அவரது தாயாரால் வெளியில் வரமுடியாததால், பற்றி எரிந்து கொண்டிருந்த காரின் உள்ளே இருந்த தாயை காப்பாற்ற போராடினார்.

முதலில் காரின் சைடில் இருக்கும் கதவை திறக்க முற்பட்டார், ஆனால் திறக்க முடியவில்லை, அதன் பின் காரின் பின்னால் இருக்கும் கதவை திறந்து, காரின் உள்ளே சென்று தாயை வெளியில் பத்திரமாக மீட்டார்.

வீடியோவை காண

இதில் தாயாருக்கு காயம் ஏற்படவில்லை எனவும், அவரது மகனுக்கு மட்டுமே சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 8-ஆம் திகதி நடைபெற்றதாகவும், சம்பவத்தை அறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்