6 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்ட வீடியோ: இப்படியும் கொடூரமான முதலாளியா?

Report Print Harishan in ஏனைய நாடுகள்

அழகு மற்றும் தோல் பராமரிப்பு நிறுவனமான Nanchang Jinhuayuan Meiye-யின் 14-வது ஆண்டு விழா நேற்று தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது.

அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் சிலர் தங்கள் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை என கருதிய நிறுவன உரிமையாளார், அவர்களுக்கு வினோதமான தண்டனை வழங்கிட முடிவு செய்துள்ளார்.

அதன்படி, அந்த பெண்களை குழுவிற்கு தலா இரண்டு நபர்கள் என பிரித்து அனைவரையும் முட்டியிட செய்துள்ளார்.

பின்னர் அவர் நிறுத்த சொல்லும் வரை இருவரும் மாறி மாறி மற்றொருவரின் கன்னத்தில் அறைந்து கொள்ள வேண்டும் என தண்டனை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவவே, 6 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர், பலரும் முதலாளியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்