அகதிகளை நாட்டுக்குள் கடத்தியவருக்கு 1489 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
25Shares

ஈராக், சிரியா அகதிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தியவருக்கு அதிகபட்சமாக 1489 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிரியா, ஈராக்கில் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர்.

பெரும்பாலானோர் படகு பயணத்தின் மூலமும், இதர போக்குவரத்தின் மூலமாகவும் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைகின்றனர்.

ஒரு சில கும்பல் அகதிகளிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு லொறி மூலமும், ரயில் போக்குவரத்து மூலம் நாட்டுக்குள் கடத்துகின்றனர்.

இந்நிலையில் கடந்தாண்டு யூலை மாதம் கிரீஸ் பொலிசார் அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்தனர்.

இவர்களில் 23 பேர் குற்றவாளிகள் என தெரியவந்தது, இதுதொடர்பான வழக்கில் Thessaloniki நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

8 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 1489 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

500 அகதிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைத்ததற்காக 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கே இந்த அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கிரீஸ் சட்டத்தின்படி ஒருவருக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கப்படும், ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்காக கிரீஸே நுழைவு வாயிலாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்