உலகின் மிகவும் ஆபத்தான இடத்திற்கு செல்ல ஆசையா?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
129Shares

உலகின் மிகவும் ஆபத்தான இடமாக கூறப்பட்டு வந்த உக்ரைனின் செர்பினோ நகரம் தற்போது சுற்றுலாபயணிகளை கவரும் நகரமாக மாறியுள்ளது.

1986-ம் ஆண்டு செர்னோபில் அணு மின் நிலையத்தின் 4-ம் அணு உலை வெடித்ததில் இருந்து, இப்பகுதியில் நேரம் அப்படியே நின்றுவிட்டதைப் போல தோன்றுகிறது.

வெடித்த அணு உலையால், கதிரியக்கம் மிக்க வேதிப் பொருள் பரவியது. பிரிப்யாட் நகரத்தில் வாழ்ந்த அனைத்து மக்கள் உட்பட, 2 லட்சம் மக்கள் உடனடியாக இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனால், இது மக்கள் வாழ்வதற்கோ, சுற்றுலா செல்வதற்கோக ஆபத்தான இடமாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த நகரம் புது வடிவை பெற்றுள்ளது.

2011-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் உக்ரைன் அரசு சுற்றுலாவை தொடங்கியதில் இருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் கைவிடப்பட்ட செர்னோபில் மற்றும் பிரிப்யாட் நகரத்தைப் பார்வையிட வருகிறார்கள்.

கதிர்வீச்சு பரிசோதனைக்கு பிறகே அனைவரும் செல்ல வேண்டும், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. எங்கு நடக்க வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. பொருட்களை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளைப் பின்பற்றுவோம் என உறுதியளிக்கும் படிவத்தில் கையெழுத்திட்ட பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சாப்பிடவோ, புகைபிடிக்கவோ இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆளில்லாத கட்டடங்களையும், பனி படர்ந்த கார்களையும் தற்போது வரும் சுற்றுலா பயணிகள் அங்கு பார்க்கலாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்