பொதுமக்கள் முன்னிலையில் 10 பேருக்கு மரண தண்டனை: காரணம் இதுதான்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
544Shares

சீனாவில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மத்தியில், கொலை, கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பிரபல விளையாட்டு அரங்கம் ஒன்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குழுமினர். கூடிய இந்த கூட்டமானது நீதித்துறையினரால் 10 முக்கிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கவே வந்துள்ளது.

பொலிஸ் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுடன் 12 குற்றவாளிகளும் அரங்கத்திற்கு வரவழைக்கப்பட்டனர். குறித்த குற்றவாளிகளில் 10 பேர் போதைமருந்து கடத்துதல், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை புரிந்தவர்கள் என கூறப்படுகிறது.

கைவிலங்கிட்டபடி அழைத்துவரப்பட்ட இந்த குற்றவாளிகளை பொதுமக்கள் பார்க்கும்படி நிறுத்தப்பட்டு, அவர்களின் குற்றங்களையும் தண்டனை விவரங்களையும் ஒலிபெருக்கியில் பகிரப்பட்டது.

இதனையடுத்து அந்த 12 பேரில் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உடனடியாக தண்டனை நிறைவேற்றுவதற்காக அழைத்து செல்லப்பட்டனர்.

குறித்த நிகழ்வானது நாடு முழுவதும் உள்ள போதைமருந்து கும்பலை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படும் என நிர்வாகிகளால் கூறப்படுகிறது.

இதன்பொருட்டு அரங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் பதாகைகள் மற்றும் போஸ்டர்களை அரசு சார்பில் பதிக்கப்பட்டிருந்தது.

Guangdong மாகாணத்தில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 10.4 டன் அளவுக்கு போதைமருந்தை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் தொடர்புடைய காலகட்டத்தில் சுமார் 16,000 பேரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்