வடகொரிய தற்கொலைப்படையின் பகீர் திட்டம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
645Shares

வடகொரியாவின் தேர்ச்சிபெற்ற தற்கொலைப்படையினர் உலகின் முக்கிய நாடுகளில் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவில் எதற்கும் அஞ்சாத மூளைச்சலவை செய்யப்பட்ட கொடூர படை ஒன்று இயங்கி வருவதாக, முன்னாள் வடகொரிய ராணுவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜூ இல் கிம் என்ற அந்த அதிகாரி வெளிப்படுத்தியுள்ள பல தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

வடகொரியா எந்த நாட்டுடனும் நேரடி போருக்கு ஒருபோதும் துணியாது எனவும், ஆனால் அந்த நாட்டின் ரகசிய படை ஒன்று உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலை தரக்கூடிய கொடுமையானது என அவர் தெரிவித்துள்ளார்.

எதற்கும் அஞ்சாத அந்த தற்கொலைப்படையானது வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்படுபவர்கள் எனவும், மிகவும் ஆபத்தான படை அது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடகொரிய தலைவர் கிம்மின் மிகப்பெரிய பலமாக கருதப்படும் அந்த தற்கொலைப்படையானது தற்போது உலக நாடுகளில் ஊடுருவி பெரும் சேதத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

முக்கியமாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அதன் எதிரி நாடுகள் சில அவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், ஆனால் அது எப்போது என்பது மிக ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

வடகொரியாவின் ராணுவ தலைமைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் போரிட்டு வெற்றிபெறும் துணிவு இல்லை என்றாலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது அவர்களுக்கு கைவந்த கலை எனவும், அதே பாணியை அவர்கள் மலேசியாவில் நடத்திக் காட்டியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொடூர சிந்தனை கொண்ட இயந்திர மனிதர்கள் போன்று செயல்படும் குறித்த ரகரிய ராணுவத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களின் அன்றாட பணி என்ன என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்றாலும்,

வல்லரசு நாடுகளில் இயங்கும் சிறப்புப்படைகளுக்கு ஒப்பானவர்கள் வடகொரியாவின் இந்த தற்கொலைப்படையினரும் என்றார் ஜூ இல் கிம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்