ஜப்பானில் புல்லட் இரயிலில் விரிசல்: 1000 பயணிகளின் நிலை என்ன?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஜப்பானில் அதிவேக புல்லர் இரயிலில் ஆபத்தான விரிசல் ஏற்பட்டிருந்ததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

ஜப்பானின் தெற்கு பகுதியிலிருந்து புல்லட் இரயில் கடந்த திங்கட் கிழமை புறப்பட்டது, தொடர்ந்து இரயில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று தீயும் வாடையும், இரைச்சல் சத்தம் அதிகமாகவும் கேட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த ஓட்டுனர் உடனடியாக வரும் வழியில் இருந்த நகோயா இரயில் நிலையத்தில் இரயிலை நிறுத்தினர். அப்போது இரயிலை சோதனை செய்த அதிகாரிகள் இரயிலின் ஒரு பெட்டியின் அடிப்பகுதியில் ஏற்பட்ட விரிசலின் காரணமாகவே தீயும் வாடையும், இரைச்சல் சத்தம் கேட்டுள்ளது என்பதை அறிந்துள்ளனர்.

இதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இரயிலை இயக்கி இருந்தால், இரயில் சென்று கொண்டிருக்கும் போதே ஏதேனும் ஒரு பகுதியில் நிச்சயமாக தடம் புரண்டு, பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கும், இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் இரயிலை நிறுத்தி சோதனை மேற்கொண்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், 1000-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரும் தப்பியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானி புல்லர் இரயில் வரலாற்றில் இது போன்ற பெரிய விரிசல் கண்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்