மகளின் பரிதாப நிலைக்கு காரணமான தாய்.. 5 மணி நேரம் போராடிய மருத்துவர்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் தாயின் கையில் இருந்த பாக்டீரியாக்களால், மூளையில் பாதிக்கப்பட்ட மகளை காப்பாற்ற மருத்துவர்கள் 5 மணி நேரம் போராடியுள்ளனர்.

சீனாவின் Guangzhou பகுதியைச் சேர்ந்த Xiao Mei என்ற பத்து வயது சிறுமியின் மூளையில் இருந்த சீல் மற்றும் கட்டிகளை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

இது குறித்து மருத்துவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அதை சாதரணமாக எண்ணிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் சிறுமி வாந்தி, மயக்கம் என சுயநினைவற்ற நிலையில் இருந்ததால், அவர் உடனடியாக Hospital of Jinan University மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின் சிறுமிக்கு சோதனை மேற்கொண்ட போது, சிறுமியின் முகத்தில் இருந்த பிளாக் ஹெட்சை அதாவது முகத்தில் பருக்கல் போன்று இருக்கும், ஆனால் அதுவே கருப்பாக இருக்கும், இதை அவரது தாயார், தன் கை மூலம் நீக்கியுள்ளார்.

அப்போது அவரது கை சுத்தமில்லாமல் இருந்ததால், அவரது கையில் இருந்த பாக்டீரியாக்கள் அப்படியே சிறுமியின் பிளாக் ஹெட்ஸ் வழியே மூளைக்கு சென்றுள்ளது. இதே போன்று அவர் தொடர்ந்து செய்து வந்ததால், பாக்டீரியாவின் தாக்கம் அதிகமாகியுள்ளது.

அதவாது மூக்கின் இரத்த நாளங்கள் மூளையுடன் இணைவதால், மூக்கில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அது மூளையை பாதிக்கும், அந்த வகையில் தான், தாயின் கையில் இருந்த அதாவது கையை கழுவாமல், சுத்தமில்லாமல் பிளாக் ஹெட்சை நீக்கியுள்ளார்.

மூளைக்கு சென்ற பாக்டீரியாக்கள் அப்படியே ஒரு சீல் போன்று இருந்துள்ளது, அதைத் தொடர்ந்து மூளையில் கட்டியும் இருந்துள்ளது, இதனால் மூளைக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே சிறுமி சுயநினைவற்ற நிலைக்கு சென்றுள்ளார், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மூளையில் இருந்த சீல் மற்றும் கட்டிகளை நீக்கிவிட்டதாகவும், இந்த அறுவை சிகிச்சை செய்து முடிக்க 5 மணி நேரம் ஆகியதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்