சிறுமியை ஏமாற்றி பாலியல் உறவு: சிக்கலில் இந்திய மாணவர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

புதிய மொபைல்போன் வாங்கி தருவதாக கூறி சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட இந்திய மாணவருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை வழங்கியுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த 25 வயதான ஹரி குமார் அன்பழகன் என்பவரே 14 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொண்ட நபர்.

சமூக வலைதளத்தில் தனக்கு ஒரு புது மொபைல் போன் வாங்க உதவி செய்யுமாறு பாதிக்கப்பட்ட 14 வய்து சிறுமி கோரி இருந்தார். இதற்கு உதவ முன்வந்த ஹரி குமாரிடம் அதற்கு பதிலாக என்ன எதிர்பார்க்கிறாய் என அந்த சிறுமி கேட்டுள்ளார்.

அதற்கு தம்முடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என ஹரி குமார் கோரியுள்ளார். மேலும் 70 சிங்கப்பூர் டொலர்களை தர வேண்டும் என்றும் சிறுமி கூறியுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்ட இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 9 மணியளவில், அவரது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சந்தித்துள்ளனர்.

பாலியல் உறவுக்கு முன்னர் சிறுமி தனக்கு 16 வயது என கூறி உள்ளார். உறவுக்கு பின்னர் குறித்த சிறுமி ஹரிடம், காத்திருக்குமாறு கூறி தமது குடியிருப்புக்குள் சென்றுள்ளார்.

ஆனால் ஹரி இதை சாதகமாக பயன்படுத்தி குறித்த சிறுமிக்கு பணம் தராமல் தப்பியுள்ளார்.

இதனிடையே சிறுமியின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்த அவரது பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொண்ட விசாரணையில் இந்த குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் ஹரிக்கும் சிறுமிக்கும் மொபைலில் நடந்த உரையாடல்களை வைத்து பொலிசார் ஹரியை கைது செய்துள்ளனர்.

சிறுமியை ஏமாற்றி பாலியல் உறவுக்கு பயன்படுத்தியதற்காக ஹரி ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் எனவும் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்