அமெரிக்க டொலரை கள்ளநோட்டாக அச்சடித்த வடகொரியா

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

தென்கொரிய வங்கிகளில் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க டொலர் கள்ளநோட்டு, வடகொரியாவில் அச்சிடப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள வங்கி கிளையில், 100 அமெரிக்க டொலர் கள்ளநோட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை ஆய்வு செய்த அதிகாரிகள், உண்மையான கரன்சி நோட்டு போலவே இருப்பதாகவும், அதிநவீன அச்சுத் தொழில்நுட்பத்தில் அது உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

மேலும் கொரிய அதிகாரிகள் கூறுகையில், ‘சூப்பர் நோட்டு’ என்று கூறப்படும் இது போன்ற கள்ளநோட்டுகளை, வழக்கமான Criminal கும்பல்களால் உருவாக்க முடியாது.

ஏனெனில், இதுபோன்ற நோட்டுகளை உருவாக்கும் அச்சு இயந்திர வசதிகளை அமைக்க ரூ.600 கோடிக்கு மேல் செலவாகும். அவ்வளவு பெரிய முதலீட்டு தொகையில் எந்த கும்பலும் ஈடுபடுவது சந்தேகம் தான்.

வடகொரியாவின் மீது கடும் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருப்பதால், அந்நாடு இந்த கள்ளநோட்டை உருவாக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்