5 வருடங்கள் துவைக்காத தலையணையை பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சீனாவை சேர்ந்த பெண்மணி ஒருவரின் கண் இமையில் 100 ஒட்டுண்ணிகள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.

Ms Xu என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக கண் அரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது கண்களும் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்றுள்ளார், இவரது கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கண் இமையில் 100 ஓட்டுண்ணிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர், கண்களில் ஒட்டுண்ணி பாதிப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரிக்காது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பெண்மணி கடந்த 5 வருடங்களாக தான் பயன்படுத்தும் தலையணையை துவைக்காமல் வைத்திருந்துள்ளார். துவைக்காமல் தலையணையை பயன்படுத்தியதால் கண்களில் அலர்ஜி மற்றும் வெண்படல பாதிப்பால் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் குணமாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்