திருமணமான சில மணிநேரத்தில் இறந்த மணப்பெண்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் மணப்பெண் ஒருவர், திருமணமான சில மணிநேரத்தில் நோய் தொற்று காரணமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில், 26 வயதான Jamieka McCarthy Harford என்னும் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது.

பின்னர், திருமணம் முடிந்த சில மணிநேரத்திலேயே Jamieka இறந்துள்ளார். பாக்டீரியா நோய் தொற்று காரணமாக மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு அவர் இறந்தது பின்னர் தெரிய வந்தது.

இதுகுறித்து அவரின் கணவர் கூறுகையில், ‘எங்களை விட்டு அவள் பிரிந்து சென்றது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எல்லோரையும் விட்டு மிக விரைவாக அவள் சென்றுவிட்டாள். இது மிகவும் கடினமான சூழல்’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, Jamieka-வின் குடும்பத்தினர் கூறுகையில், ‘Jamieka மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார். அவள் மிகவும் பாசம் நிறைந்தவள். ஒரு சிறந்த காதலியாகவும், மகளாகவும், தங்கையாகவும், தோழியாக இருந்த அவள் எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள்’ என தெரிவித்துள்ளனர்.

இந்த இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்ட ‘The Auckland Regional Health Service' எனும் அமைப்பு, Meningococcal என்னும் நோயின் தாக்கத்தினால் தான் Jamieka இறந்துள்ளார் என்பதை உறுதி செய்தது.

மேலும், Jamieka-வின் குடும்பத்தினருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், இந்த நோய் தொற்று

உள்ளவர்களிடம் மணிக்கணக்கில் நேரம் செலவிடும்போது, அவர்களுக்கும் இந்த நோய் பரவக்கூடும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்