நிற்கமுடியாமல் தடுமாறிய மகன்: மனிதாபிமானமின்றி எட்டி உதைத்து இழுத்துச் சென்ற தந்தை

Report Print Santhan in ஏனைய நாடுகள்
289Shares

கிரிகிஸ்தானில் நிற்க முடியாமல் தடுமாறிய மகனை, அவரது தந்தை எட்டி உதைத்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Kyrgyzstan-னின் தலைநகரான Bishkek-ல் தான் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பனி மூடிய நடைபாதையில், தந்தை மற்றும் மகன் இருவர் நடந்து செல்கின்றனர்.

ஒரு கட்டத்தில் தந்தை சிறுவனை தனியாக நடக்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் சிறுவனோ அந்த பனியில் நடக்க முடியாமல், கீழே விழுந்துள்ளான்.

இதைக் கண்ட தந்தை அவனை உடனடியாக தூக்காமல், வேடிக்கை பார்த்து மீண்டு எழுந்து நட என்று கூறுகிறார். ஆனால் சிறுவன் மீண்டும் முயற்சி செய்த போது கீழே தடுமாறி கிழே விழுந்து படுத்துக் கொள்கிறான்.

அப்போது அந்த தந்தை தன் மகன் என்று கூட பாராமல், தன் காலை வைத்து எட்டி உதைக்கிறார், இதில் சிறுவன் சற்று தூரம் செல்கிறான், அதன் பின் அவன் கையில் பிடித்துக் கொண்டு தரதர என இழுத்துச் செல்கிறார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியதால், பொலிசார் அந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டு, தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், தந்தையின் வயது 50 வயது இருக்கும் எனவும், அவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்