வாழ்விடம் தேடி வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் ஏராளமானோர் கைது

Report Print Santhan in ஏனைய நாடுகள்
422Shares

வாழ்விடம் தேடி வெளிநாடுகளுக்கு பயணிக்க முயற்சித்த ஏராளமான அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் போர் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்த போதிலும், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் அகதிகளின் பயணங்கள் இன்று வரை முற்றுப் பெறவில்லை.

இதில் குறிப்பாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு தான் பெரும்பாலானோர் செல்கின்றனர்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு செல்ல 30-க்கும் மேற்பட்டோர் முயற்சித்துள்ளனர். ஆனால் இவர்கள் இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒகி புயல் காரணமாக நிலவிய மோசமான வானிலையால் இவர்கள் கரை ஒதுங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அடுத்தபடியாக இலங்கையிலிருந்து வெளியேறிய அகதிகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

படகு வழியாக செல்ல ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை பெறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்