வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் ஆஸ்தான புகைப்படக்கலைஞர் ஒருவர் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த புகைப்படக்கலைஞர் உயிருடன் எரிந்து சாம்பலான காணொளி காட்சிகள் கடந்த நவம்பர் 30-ஆம் திகதி செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில்,
அச்சமபவம் தொடர்பான பகீர் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. குறித்த புகைப்படக்கலைஞர் வடகொரியா சமீபத்தில் சோதனை மேற்கொண்ட அதி சக்தி வாய்ந்த Hwasong-15 ஏவுகணை தளத்தில் இருந்ததாகவும்,
குறித்த ஏவுகணை சோதனை மேற்கொண்ட நேரத்தில் வெப்பம் வெளியேறி அதில் உடல் முழுவதும் எரிந்து சாம்பலானதாக தெரிய வந்துள்ளது.
ஏவுகணை சோதனையின் போது அதை மிக நெருக்கமாக நின்று புகைப்படம் எடுக்க வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டிருந்ததாகவும், அதனாலையே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் புகைப்படக்கலைஞரின் தவறுதலால் ஏற்பட்டதா அல்லது ஏவுகணை கட்டுபாட்டு அறையில் இருந்து போதிய எச்சரிக்கை நடவடிக்கை மெற்கொள்ளாததால் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் தென் கொரிய அரசு கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. புகைப்படக்கலைஞர்களுக்கு ஏவுகணையில் இருந்து வெளியேறும் வெப்பத்தின் தாக்கம் தொடர்பில் தகவல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும், ஆனால் வடகொரிய தலைவரின் ஆட்சியின் கீழ் இதுபோன்ற கொடுமைகள் இது முதன்முறை அல்ல எனவும் காட்டமாக விமர்சித்துள்ளது.