சீனாவில் உள்ள கிராமப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று 35 கிலோ எடை கொண்ட ஆட்டினை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் திணறியதை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
Hainan மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் மேய்துகொண்டிருந்த ஆட்டினை விழுங்கியுள்ளது.
ஆட்டின் எடை 35 கிலோ ஆகும், இந்த எடையை தாங்கிகொள்ள முடியாமல் அங்கும் இங்கும் மலைப்பாம்பு ஊர்ந்துள்ளது. இந்நிலையில், மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்த ஆடு, அதன் உள்ளூறுப்புகளை தாக்கியதால் மலைப்பாம்பு உயிரிழந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ஒரு மலைப்பாம்பினால் ஆட்டினை விழுங்குவது மிகவும் சிரமமான ஒன்று, அப்படி விழுங்கினாலும் அந்த மலைப்பாம்பினால் உயிர் வாழ முடியாது என தெரிவித்துள்ளனர்.