2017 ஆம் ஆண்டில் உலக மக்களால் அதிக பார்க்கப்பட்ட வீடியோக்கள் இவைதான்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
223Shares

அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், சாதனைகள் என பல்வேறு கட்டங்களை நோக்கி 2017 ஆம் ஆண்டு பயணித்தாலும், மக்கள் மத்தியில் ஒரு சில சம்பவங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போதைய காலகட்டத்தில் சமூகவலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், ஒரு செய்தியை வைரலாக்குவது என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டில் பல்வேறு செய்திகள் மற்றும் வீடியோக்கள் வைரலானதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோக்கள் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து அனைவராலும் அதிகமுறை பாக்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோக்கள் அனைத்தும், எவ்வளவு நேரம் செலவழித்துள்ளார்கள், கருத்துக்கள், வீடியோக்களை பகிர்ந்துகொள்ளுதல் போன்றவற்றினை அடிப்படையாக கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளன.

அவற்றின் தொகுப்பு இதோ,

The Mask Singer

தாய்லாந்தில் நடைபெற்ற ஒரு பாட்டு போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர் முகம் மற்றும் உடல் முழுவதும் மாஸ்க் அணிந்துகொண்டு வந்து பாடலை பாடி அனைரையும் அசத்தியுள்ளார்.

இந்தி வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை 182 மில்லியன் ஆகும்.

Shape of You

இந்த பாடல் பிரித்தானிய பாடகர் Ed Sheeran என்பவரால் பாடப்பட்டது, இந்த பாடலுக்கு நடனம் ஆடுபவர்கள் தங்கள் உடலை நாலாபக்கமும் வளைத்து ஆடுவது மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தை ஈர்த்தது.

Table tennis

டேபிள் டென்னிஸ்ஸின் ட்ரிக் காட்சிகளை ஏழு நிமிடங்கள் மற்றும் 16 விநாடிகள் ஒரு வீடியோவாக வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் விளையாடியவர்கள் நம்பமுடியாத அளவுக்கு பந்துகளை மிக நேர்த்தியாக கோல் போட்டனர்.

America's Got Talent

அமெரிக்காவில் நடைபெற்ற America's Got Talent என்ற பாட்டு போட்டி நிகழ்ச்சியில் 12 வயது சிறுமி தனது குரலை பல்வேறு பரிமாற்றங்களில் பாடி அனைவரையும் கவர்ந்தார்.

Donald Trumph

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிகழ்ச்சியில் அவர், உறுதி மொழி அளிக்கும்போது தவறான தனது வாய் அசைவினை கொடுத்துள்ளார்.

A history of the entire world

உலகத்தை பற்றிய ஒரு வரலாறு என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் அறிவியல் மற்றும் சமூக ஆய்வுகள், பழங்குடியினர்கள், நாடுகள் எவ்வாறு அமைந்தன உள்ளிட்டவற்றை றை 20 நிமிடங்களில் சுருக்கி வெளியிட்டுள்ளனர்.

In a heartbeat

அனிமேஷன் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த Short Film ஆகும். இது ஒரு சிறுவனின் இதயத்தில் ஏற்படும் அச்சம் தொடர்பான Short Film ஆகும்.

பிபிசி செய்தி வாசிப்பு

தென் கொரிய அதிபர் குறித்த செய்திக்காக பிரபல பிபிசி தொலைக்காட்சியில் அந்நாட்டை சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் கெல்லி என்பவர் நேரலையில் இணைந்திருந்தார்.

அவர் தொடர்ந்து பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது, அவரது பெண் குழந்தை திடீரென அவரது அறைக்குள் நடனமாடிக்கொண்டு நுழைந்த வீடியோ வைரலானது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்