குழந்தையை பிரசவிக்கும் புகைப்படம்... 1 மணிநேரத்தில் 10,000 லைக்ஸ்!

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
3543Shares

தைவானை சேர்ந்த மருத்துவர், கர்ப்பிணி பெண் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை வெளியே எடுக்கும் காட்சியை தனது தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனால், இந்த புகைப்படம் பார்ப்பதற்கு ஆபாசமாக இருக்கிறது எனக்கூறி பேஸ்புக் அதனை நீக்கியுள்ளது.

Taipei நகரில் உள்ள Dianthus MFM மையத்தில் Lin Tzu-hung மகப்பேறு மருத்துவரான பணியாற்றி வருகிறார். இவர் அங்கு கர்ப்பிணி பெண் ஒருவர் தனக்குத்தானே சுகப்பிரவசம் பார்த்து குழந்தையை தானாக வெளியே எடுக்கும் புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட்டு, இப்பெண்ணின் மன தைரியம் மற்றும் உடல் வலிமையை பாராட்ட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படம் பதிவிட்ட 1 மணிநேரத்தில் 10,000 லைக்குகளை பெற்றது, ஆனால் அதற்குள் இந்த புகைப்படம் ஆபாசமான புகைப்படம் எனக்கூறி பேஸ்புக் நிறுவனம் அதனை நீக்கிவிட்டது.

இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் கூறியதாவது, பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இதனை செய்தேன். இருப்பினும் இந்த புகைப்படத்தை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்