உடல் ரீதியாக சித்ரவதை செய்து தீ வைத்த இராணுவ வீரர்கள்: 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர்.

ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

ரோஹிங்கியா இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு, மியான்மர் ராணுவத்தினர் தீவைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், ராக்கைன் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் இராணுவத்தினர் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கிராமத்தில் இருந்து தப்பித்து வங்கதேச எல்லையில் உள்ள அகதி முகாமில் வசித்து வரும் ரோஹிங்கியா பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியாக பேசியுள்ளார்.

Suanara(25) என்ற பெண் கூறியதாவது, எனக்கு 22 வயது இருக்கையில் நான் 8 மாதம் கர்ப்பமாக இருந்தேன், எங்கள் கிராமத்திற்குள் நுழைந்த கிராமத்தினர் வீடுகளுக்கு தீவைத்து எரித்தனர்.

கிராமத்தில் இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்தனர், நான் கர்ப்பிணி என்று தெரிந்தும் என்னை விட்டுவைக்காமல் இராணுவ வீரர்கள் என்னையும் பலாத்காரம் செய்தனர். எனது கண் எதிரிலேயே எனது மூத்த மகனை கொலை செய்தனர்.

தற்போது வரை எனது குடும்ப உறுப்பினர்கள் 17 பேரை நான் இழந்துள்ளேன். அவர்கள் என்னை பலாத்காரம் செய்துவிட்டு, நான் இறந்துவிட்டேன் என நினைத்து வீட்டிற்கு தீவைத்துவிட்டு சென்றனர்.

ஆனால், நான் தப்பிவிட்டேன். ஆனால் எனக்கு பிறந்த குழந்தையும் 2 நாட்களில் இறந்துவிட்டது, வங்கதேச எல்லையில் உள்ள அகதி முகாமில் தான் நான் சிகிச்சைபெற்றேன். எங்கள் இனத்தவருக்கு நடக்கும் இதுபோன்ற கொடுமைகளுக்கு நீதிவேண்டும் என கூறியுள்ளார்.

மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக அரசுப் படைகள் நடத்திய ‘இன அழிப்பு’ தாக்குதல் தொடர்பாக சர்வதேச கிரிமினல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...