சக தமிழரை சிங்கப்பூரில் கத்தியால் வெட்டிய நபர்: சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சக தமிழரை கத்தியால் வெட்டிய வழக்கில் சிங்கப்பூரில் தமிழருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 6 பிரம்படியும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரில் அருணாசலம் மணிகண்டன் என்பவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வந்தார். அவருடன் கணேசன், அருண் பிரகாஷ் போன்ற தமிழர்களும் இன்னும் பலரும் தங்கி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் ஒருநாள் அருணாசலம் மது குடித்து விட்டு அறையில் வாந்தி எடுத்துள்ளார்.

அதைக் கண்ட கணேசன், அவரை அறையை கழுவி சுத்தம் செய்யுமாறு கூறிய நிலையில் அருணாச்சலம் செய்யவில்லை.

இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், போதையில் இருந்த அருணாச்சலம் கணேசனை கத்தியை எடுத்து வெட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து கணேசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட அருணாச்சலம் கைது செய்யப்பட்டார்.

அருணாச்சலம் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் அவரின் வழக்கறிஞர் சுஜாதா செல்வகுமார், தனது கட்சிக்காரர் செய்த தவறுக்காக மனம் வருந்துவதாக கூறி குறைந்த தண்டனை அளிக்க கோரினார்.

இதை தொடர்ந்து அருணாச்சலத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 6 பிரம்படியும் வழங்குமாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...