வடகொரிய நடத்திய கொடூர பரிசோதனைகள்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

வடகொரியா ஒரு நரகம் என அங்கே வாழும் நாட்டு மக்களே கூறும் அளவிற்கு கடுமையான சட்டங்கள் மற்றும் கொடூரமான தண்டனைகளும் பல இருக்கின்றன. இதில் பரிசோதனை என்ற பெயரில் பலரும் பரிதாமக இறந்துள்ளாரகள்.

வடகொரியாவின் சிறையில் இருந்த பெண்மணி ஒருவர் தான் கண்டதாக கூறிய பெண்கள் மீது நடத்தப்பட்ட ஒரு கொடுமையான மனித பரிசோதனை இது.

வடகொரியர்கள் சிறையில் இருந்த ஐம்பது பெண் கைதிகளைகளுக்கு நச்சு கலந்த முட்டைகோஸ் இலைகளை சாப்பிட கூறி வலியுறுத்தி அந்த நச்சு கலந்த முட்டைகோஸ் இலைகளை உண்ட பிறகு அனைவரும் இரத்த வாந்தி எடுத்து அதில் சிலருக்கு ஆசனவாய் வழியாக இரத்தம் வெளியாகி இருபது நிமிடங்களில் அந்த பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

வடகொரியா நடத்திய கொடூரமான பரிசோதனைகளில் ஒன்று, அனஸ்தீஷியா தராமல் அறுவை சிகிச்சை செய்வது. அறுவை சிகிச்சையை அந்த நபர் விழிப்புடன் இருக்கும் போதே முழுமையாக செய்துள்ளனர். இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகொரிய சிறை காவலராக பணியாற்றி அங்கிருந்து வெளியான நபர் ஒருவர் ஆய்வுகளில் உட்படுத்தப்படும் நபர்கள் மற்றும் மரண தண்டனை பெற்றுள்ள நபர்களை பற்றியும் இவர் கூறுவது எம்மையே அச்சத்தில் ஆழ்தியது

ஆய்வுகளில் உட்படுத்தப்படும் நபர்கள் மற்றும் மரண தண்டனை பெற்றுள்ள நபர்களை ஒரு பானம் கொடுத்து பிறகு, தலையில் வலுவாக சுத்தியல் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு தாக்குவார்களாம். பிறகு ஜோம்பிகள் போல அவர்களை துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொலை செய்வார்களாம்.

கேம்ப் 22 என்ற இடத்தில் பணியாற்றி வந்த சிறை காவலர் ஒருவர் வடகொரியாவில் பரிசோதனை செய்யப்பட்ட வாயு ஆயுதங்கள் பற்றி கூறியுள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் ஒரு கேஸ் சாம்பாரில் அடைக்கப்பட்டு ஒரு குழாய் வழியாக விஷத்தன்மை வாய்ந்த காற்றை அந்த கேஸ் சாம்பாருக்குள் அனுப்புவார்கள் இந்த விஷ வாயு அவர்களின் இரத்தத்தில் கலந்து அவர்கள் இரத்தம் கக்கி இறந்துவிடுவார்களாம்.

ஒரு மரத்துண்டு மீது முட்டியிட்டு நிற்க வேண்டும். அப்பது முட்டிக்கு கீழே இரத்த ஓட்டம் தடைப்படுவது போல கால்களை லாக் செய்துவிடுவார்கள். இப்படியாக ஒரு வாரம் வைத்திருந்தால் அந்த கைதியால் நடக்கவே முடியாது. இது ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால் அந்த சிறை கைதி இறந்துவிடுவர்.

வடகொரியாவில் இருந்து பின்லாந்துக்கு தப்பித்து ஓடிவந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் தான் உட்படுத்தப்பட்டிருந்த பரிசோதனை பயிற்சி குறித்து கூறுகின்றார்.

பிறப்பால் குறைப்பாடு கொண்டிருக்கும் குழந்தைகள் மீது ஆந்த்ராக்ஸ் பரிசோதனை நடத்தியுள்ளது வடகொரிய அரசு ஆந்த்ராக்ஸ் என்பது பயங்கரமான கெமிக்கல் ஆகும். இதை பிறக்கும் போதே மனவளர்ச்சி அல்லது உடல் வளர்ச்சி போன்ற பிறப்பு குறைபாடுகளுடன் இருக்கும் குழந்தைகள் மீது பரிசோதனை செய்துள்ளனர்.

இவ்வாறு ஈவிரக்கமின்றி வடகொரியர்கள் மக்கள் மீது பரிசோதனை நடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers