காதலித்து ஏமாற்றிய காதலனை கொடூரமாக கொலை செய்த இளம்பெண்: கிடைத்த தண்டனை?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் காதலித்து ஏமாற்றிய காதலனை ஆசிட் வீசி கொலை செய்த காதலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் பாஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷம்ரியா(20). இவர் சதகத் அலி(23) என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.

இந்நிலையில் சதகத் அலி, ஷம்ரியாவுடன் பேசுவதை குறைத்துள்ளார். அதன் பின் அவருடன் பேசுவதை முற்றிலுமாக குறைத்து விட்டு, வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இதை அறிந்த ஷம்ரியா, சதகத் அலி வேறொரு பெண்ணை திருமணம் செய்யாமல் இருக்கும் வகையில் அவருக்கு தக்கதொரு பாடம் கற்பிக்க திட்டமிட்டார்.

அதன் படி கடந்த ஆண்டு சதகத் அலியை தனது வீட்டுக்கு வரவழைத்த ஷம்ரியா மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவர்மீது திடீரென்று வீசினார்.

இதனால் ஏற்பட்ட தீக்காயங்களால் சதகத் அலி சிகச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து ஷம்ரியாவை கைது செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான வழக்கு நடந்து வந்த வேளையில், குற்றவாளியான ஷம்ரியாவுக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் நீதிமன்ற வரலாற்றில் ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...