விமானியை உயிரோடு எரித்துக்கொன்ற வீடியோவை வெளியிட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சிரியா விமானப்படையின் விமானி ஒருவரை உயிருடன் எரித்துக்கொல்லும் வீடியோவை ஐஸ் தீவிரவாதிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

சிரியா விமானப்படை விமானியான Azzam Eid, கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

Syrian Arab Air Force MiG 23 என்ற இந்த விமானத்தை ஐஸ் தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கியதில், அது கீழே விழுந்தது. அந்த விமானத்தில் இருந்த விமானியை இவர்கள் கடத்தி சென்றனர்.

சுமார், 18 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த விமானி குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்துள்ள விமானியின் தலை மொட்டையடிக்கப்பட்டுள்ளது.

அவரது கழுத்தில் கம்பி போட்டு இறுக்கி கட்டப்பட்டுள்ளது, அவரது பின்னால் நிற்கும் தீவிரவாதி விமானியை இறுக பிடித்துக்கொண்டுள்ளார்.

அதன்பின்னர் விமானியை உயிருடன் தீவைத்து எரித்துக்கொல்கின்றனர்.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது மற்றும் மேலும் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, அந்த வீடியோவின் இறுதியில் சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் பழைய காட்சிகளையும் இணைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...