விசித்திரம் நிறைந்த தீவு..வெறும் 9 பேர் மட்டும் வாழும் அதிசய கிராமம்: எங்கு தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பாரோ தீவில் உள்ள கிராமத்தில் வெறும் 9 பேர் மட்டுமே வாழும் அதிசய கிராமம் உள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பல தீவுகள் உள்ளன. அதை அனைத்தையும் கணக்கிட்டால் மொத்தம் 18 தீவுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 18 தீவுகளும், சுரங்கப்பாதைகள், பாலங்கள் மற்றும் படகுப் போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீவுகளில் ஒன்றான பாரோ தீவில் உள்ள கசடலூர் என்ற கிராமத்தில் வெறும் 9 பேர் மட்டுமே வாழ்ந்து வருவதாகவும், இவர்களுக்கு வீடுகளும் தனித் தனியாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அந்த கிராமத்தை தொடர்ந்து அருகிலுள்ள கிராமத்தில் 10 பேரும், இவற்றைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் 22 பேரும் என, இப்படி அட்லாண்டில் பெருங்கடல் பகுதியில் உள்ள 18 தீவுகளிலும் குறைந்த அளவிலான மக்களே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers