இது தெரியாம போச்சே?மூன்று மணி நேரம் போராடிய மனிதர்: சிசிடிவியில் சிக்கிய காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மது அருந்திய நபர் கதவை திறக்க முடியாமல் சுமார் 3 மணி நேரம் போராடிய சம்பவம் தொடர்பான வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மாஸ்கோவின் Balashikha பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில், மது அருந்திய நபர், அங்கிருக்கும் கதவை திறக்க முற்படுகிறார்.

ஆனால் கதவோ திறக்கவில்லை, தொடர்ந்து திறக்க முற்படும் அவர் திறக்க முடியாததால், ஆத்திரத்தில் கதவை உதைக்கிறார், தட்டுகிறார்.

இருந்த போதிலும் கதவை திறக்க முடியவில்லை, இதற்கிடையில் அவர் நண்பர் வருகிறார். அவர் அதன் பின் மீண்டும் உள்ளே சென்றுவிடுகிறார்.

கதவை திறக்க முற்படும் நபரோ, தொடர்ந்து தன்னுடைய முயற்சியில் கை மற்றும் கால் போன்றவைகளை வைத்து திறக்கிறார்.

கதவு திறக்காத காரணத்தினால், சோர்வடைந்து நின்ற அவர், அதன் பின் அங்கிருந்த பட்டன் ஒன்றை அழுத்தியவுடன், கதவு திறக்கிறது. அதன் பின் நிம்மதியாக வெளியில் செல்கிறார்.

இது தொடர்பான காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அது எடிட்டிங் செய்யப்பட்டு வெளியிட்டுள்ளதுடன், காலை உள்ளூர் நேரப்படி 06.16 கதவை திறக்க முற்பட்ட நபர் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு பின் போராடி திறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்