எகிப்து மசூதியில் தாக்குதல்: 230 பேர் பலி

Report Print Kalam Kalam in ஏனைய நாடுகள்

எகிப்தில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 230 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு சினாய் மாகாணத்தின் அல் ஆரிஷ் அருகே உள்ள பில் அல்-அபெட் நகரின் அல் ரவுடா மசூதியிலேயே இக்கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த வேளையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனங்களில் இருந்த நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலில் 230 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

சியான் பகுதியில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் இதுவே பாரிய தாக்குதலாக கருதப்படுகிறது.

எனினும் இத்தாக்குதலுக்கு காரணமான நபர்கள் குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்