நாட்டின் வருமானத்தை பெருக்க சவுதி அரேபியாவின் புதிய திட்டம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நாட்டின் வருமானத்தை அதிகரிக்க சவுதி அரேபியா வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்க திட்டமிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பதவி ஏற்ற பின், பல அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அந்நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை அவர் நீக்கியுள்ளார்.

மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ‘சுற்றுலா விசா’ வழங்க உள்ளதாகவும், நாட்டின் வருமானத்தை பெருக்கவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும், சவுதியின் சுற்றுலா மற்றும் பாரம்பரிய துறை தலைவர் இளவரசர் சுல்தான் பின் சல்மான் பின் அப்துல்லாசிஸ் அறிவித்துள்ளார்.

சவுதியில் வெளிநாட்டினர் நுழைய கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு தங்கி பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே விசா தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், புனித தலங்களுக்கு செல்லும் முஸ்லீம் யாத்ரிகர்களுக்கு மட்டும் விசா வழங்கப்பட்டு வந்த நிலையில், இளவரசர் அறிவித்துள்ள ‘சுற்றுலா விசா’ அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்