நிறைமாத கர்ப்பிணி போல ஏமாற்றிய இளம்பெண்: விசித்திர காரணம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கர்ப்பமாக இருப்பது போல வயிற்றில் பெரிய கிண்ணத்தை வைத்து கொண்டு திரையரங்கு உள்ளே உணவு பொருட்களை எடுத்து செல்வது குறித்து பெண் கூறிய ஐடியா இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஏஞ்சலா பிரிஸ் என்ற இளம் பெண் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தான் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது போல வீங்கிய வயிற்றுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டுள்ளார்.

அதோடு ஒரு பெரிய அளவிலான கிண்ணத்தின் படத்தையும் பதிவேற்றியுள்ளார்.

திரைப்படம் ஓடும் திரையரங்கு உள்ளே திண்பண்டங்களை எடுத்து செல்ல புதிய ஐடியாவை கண்டுப்பிடித்துளேன் என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, வெளி உணவுகளை திரையரங்கு உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் இந்த வழியை பயன்படுத்தி சிப்ஸ், பாப்கார்ன், சொக்லேட் போன்ற திண்பண்டங்களை கிண்ணத்தில் வைத்து அதை பெரிய வயிறு போல காட்டலாம் என ஏஞ்சலா கூறுகிறார்.

இந்த பதிவு 20000 முறை பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. இது ஒரு அருமையான யோசனை என என பல டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் ஏஞ்சலாவை பாராட்டி வரும் நிலையில் பலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்