ரத்தத்தை தெளித்தால் இப்படி நடக்குமாம்!

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

மெக்ஸிகோ நாட்டில் பெண்களின் ரத்தத்தை விவசாய நிலங்களில் தெளித்தால் மழை பொழிந்து விவசாயம் என்று நம்பிக்கையில் விழா ஒன்றினை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.

மெக்சிகோவின் நஹூவா கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பெண்கள் அனைவரும் தங்கள் கணவன்மார்களை விவசாய வேலைக்கு அனுப்பிவிட்டு அந்த கிராமத்தின் ஒரு பகுதியில் கூடுகிறார்கள்.

அதிகாலை எழுந்து சமைத்துக்கொண்டு வந்த, வான்கோழி, கோழி, அரிசியில் செய்யப்பட்ட உணவு, வேக வைத்த முட்டைகள், ரொட்டி, குழம்பு போன்ற உணவுகளை எடுத்துச்சென்று அங்கு அலங்கரித்து வைத்துக்கொள்கிறார்கள்.

அதன்பின்னர், குஸ்தி சண்டை நடைபெறுகிறது. இந்த சண்டையில் மூக்கு உடைந்து ரத்தம் வரும் வரை சண்டை நடைபெறுகிறது.

அப்படி சண்டையில் சிந்தும் ரத்தத்தை வாளியில் சேகரித்து வைக்கிறார்கள். பிறகு சேமிக்கப்பட்ட ரத்தத்தில் தண்ணீரைக் கலந்து விவசாய நிலங்களில் தெளிக்கிறார்கள்.

இப்படிச் செய்வதன் மூலம் கடவுள் மகிழ்ந்து, தேவையான மழையைக் கொடுப்பார் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

விழாவின் இறுதியில் காட்சிக்கு வைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்குச் செல்கிறார்கள்.

இது பராம்பரியம் என்பதால் மனிதர்களின் முகத்தில் இருந்து ரத்தம் வருவதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என இக்கிராம பெண்கள் கூறுகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்