உலகில் சிறந்த திறமைசாலிகளை ஈர்க்கும் நாடுகள்: பட்டியல் வெளியானது

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலகில் சிறந்த திறமைசாலிகளை ஈர்த்து தக்க வைத்துக்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.

ஒட்டுமொத்தமாக 63 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இதில் இரண்டாமிடத்தை டென்மார்க் நட்டும் மூன்றாமிடத்தை பெல்ஜியமும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அதன் அடுத்த இடங்களில் ஆஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் உள்ளன.

அயர்லாந்து 14-வது இடத்திலும் அமெரிக்கா 16-வது இடத்திலும், அவுஸ்திரேலியா 19-வது இடத்திலும் உள்ளன.

குறித்த பட்டியலில் பிரித்தானியா 21 ஆம் இடத்தில் பிந்தங்கியுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளில் கல்வி, தொழில் பயிற்சி, பணியிட பயிற்சி, மொழி திறன், வாழ்க்கை செலவு, வாழ்க்கை தரம், ஊதியம் மற்றும் வரி விகிதங்கள் உள்லிட்டவைகளையும் முக்கிய காரணிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் பல இந்த ஆய்வில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்