26 அடி உயரத்தில் தாக்கிய கடல் அலை: மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் தோய்வு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அர்ஜென்டினாவில் கடுமையான கடல் சீற்றம் காணப்படுவதால் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் பல்வேறு நாடுகளில் உள்ள 10-கும் மேற்பட்ட கப்பல்களும் விமானங்களும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டு வரும் கப்பல்களை கொந்தளிக்கும் கடல் அலைகள் கடுமையாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொந்தளிக்கும் கடல், கடுமையான காற்று, மோசமான வானிலை என மீட்பு நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

6 அடி அளவுக்கு கடல் அலை ஆர்ப்பரித்து தாக்கியதாக கூறும் மாலுமிகள், பின்னர் காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அது 26 அடி என உயர்ந்துள்ளதாகவும், இதனால் மீட்பு நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சான் ஜூவான் எனப்படும் அர்ஜென்டினா கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலானது நவம்பர் 13 ஆம் திகதி மார் டெல் பிளாடா பகுதிக்கு சென்றுள்ளது.

ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட 44 ஊழியர்களுடன் சென்ற குறித்த கப்பல் கடந்த ஒரு வார காலமாக எவ்வித தகவலும் இன்றி மாயமாகியுள்ளது.

தற்போது குறித்த கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் குழு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்