உலகிலேயே நம்பிக்கையான அரசாங்கம் எது தெரியுமா?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

உலக நாடுகளிடையே நம்பிக்கையான அரசு மற்றும் நிர்வாகம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன.

Gallup World Poll என்ற அமைப்பு, ஒரு நாட்டின் பொருளாதாரம், அதன் வளர்ச்சி, அரசியல் பிரச்சனை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் என நாட்டின் நிர்வாகத்தைப் பாதிக்கும் அனைத்து விஷயங்களையும் முன்னிலைப்படுத்தி, அந்தந்த நாடுகள் மீது நம்பிக்கை உள்ளதா என்று ஆய்வு நடத்தியுள்ளது.

1000 பேர்களின் பதில்களை கொண்டு நம்பிக்கையான அரசின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து, இந்தோனேஷியா ஆகிய இருநாடுகள் 82 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளன.

 • 3 ஆம் இடத்தில் இந்தியா - 73 சதவீதம்
 • 4 ஆம் இடத்தில் Luxembourg - 68 சதவீதம்
 • 5 ஆம் இடத்தில் நோர்வே - 66 சதவீதம்
 • 6 ஆம் இடத்தில் கனடா - 64 சதவீதம்
 • 7 ஆம் இடத்தில் துருக்கி - 57 சதவீதம்
 • 8 ஆம் இடத்தில் நியூசிலாந்து - 56 சதவீதம்
 • 9 ஆம் இடத்தில் அயர்லாந்து - 56 சதவீதம்
 • 10 ஆம் இடத்தில் நெதர்லாந்து - 56 சதவீதம்
 • 11 ஆம் இடத்தில் ஜேர்மனி - 53 சதவீதம்
 • 12 ஆம் இடத்தில் பின்லாந்து - 49 சதவீதம்
 • 13 ஆம் இடத்தில் சுவீடன் - 49 சதவீதம்
 • 14 ஆம் இடத்தில் டென்மார்க் - 45 சதவீதம்
 • 15 ஆம் அடத்தில் ஆஸ்த்திரியா - 43 சதவீதம்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்