44 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பல் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அர்ஜென்டினாவில் பெண் அதிகாரி உள்ளிட்ட 44 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பல் தொடர்பில் வெளியான புதிய தகவலால் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அர்ஜென்டினாவில் கடந்த புதன்கிழமை பெண் அதிகாரி உள்ளிட்ட 44 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஊழியர்கள் கருவிகளை பயன்படுத்தும் சத்தம் கேட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மாயமான நீர்மூழ்கி கப்பலை மீட்கும் நடவடிக்கையில் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

திங்களன்று பதிவு செய்யப்பட்ட இந்த ஒலிகள் கண்டிப்பாக மாயமான நீர்மூழ்கி கப்பலில் உள்ள வீரர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பத்திரமாக இருப்பதையே சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பதிவாகியுள்ள குறித்த ஒலி இழைகளை தற்போது கடற்படை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதற்கு முன்னர் இதுபோன்று பதிவான ஒலியில் குழுவினர் ஆபத்தில் கதறுவது போன்று இருந்தது.

ஆனால் அந்த ஒலி இழைகளை ஆராய்ந்ததில், அவை எதுவும் உண்மை இல்லை என தெரிய வந்தது.

மாயமான குறித்த கப்பல் தொடர்பில் சர்வதேச குழுவினர் வான் மற்றும் கடல் வழியாக தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

பத்துக்கும் மேற்பட்ட சிறு கப்பல்கள் இதற்கென ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரேசில், சிலி உள்ளிட்ட நாடுகள் அர்ஜென்டினாவுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்