உலகின் மிகவும் பழமையான திருமண விவாகரத்து பட்டையம் கண்டுபிடிப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
107Shares
107Shares
ibctamil.com

துருக்கியில் 4000 ஆண்டுகளுக்கு முன் களிமண்ணில் எழுதப்பட்ட விவாகரத்து பட்டையத்தை தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

துருக்கி காரன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவும் பழமையான திருமண விவாகரத்து பட்டையத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இப்பட்டையமானது 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தம்பதியரின் விவாகரத்து தொடர்பாக எழுதப்பட்டது எனக்கூறப்படுகிறது.

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அசிரியான் பகுதியில் வாழ்ந்த Laqipum மற்றும் அவரது மனைவி காடலாவிற்கு திருமணமான பிறகு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

கடாலாவிற்கு குழந்தை பிறக்காததால் அவர் தனது கணவருக்கு வேறோரு திருமணம் செய்து வைக்க சம்மதம் வழங்கியுள்ளார். இவ்வாறு அந்த பட்டையத்தில் எழுதப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அந்த ஒப்பந்தத்தின் படி Laqipum தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தால், அவர் கடலாவிற்கு வெள்ளி வழங்க வேண்டும். கடாலா விவாகரத்து வழங்கினால் அவர் Laqipum-கு வெள்ளி வழங்க வேண்டும்.

இந்த பட்டையம் தற்போதைய துருக்கியின் குல்தீப் கனேஷில் உள்ள ஆராய்ச்சி தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்